தழும்பு

மரணம் நிகழ்ந்த வீடுகள் துக்கத்தால் மட்டும் நிரம்பி வழியாது. பலாப்பழச் சுளை போல பல சுவாரசியமான தகவல்களாலும் நிறைந்திருக்கும். மரணம் நிகழ்ந்த வீட்டில் ஒப்பாரி வைத்து அழுபவர்கள் எல்லாம் மரணப் பலகையில் கால் நீட்டி படுத்திருப்பவரை பற்றியது மட்டுமல்லாது தனது வீட்டில் இறந்து விட்டவரைப் பற்றியோ அல்லது இன்னமும் இறக்காமல் இருப்பவர்களைப் பற்றிய அழுகையாகக் கூட இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு துஷ்டி வீட்டில்தான் அந்த தாத்தாவை சந்தித்தேன்.

மரணத்தை சந்தித்தவன் திருமணமாகாத மிக இளம் வயதினன். சாலை விபத்தொன்றில் அகால மரணமடைந்திருந்தான். பிரேதப் பரிசோதனையிலிருந்து மையவாடியில் உடலை அடக்கம் செய்யும் வரை உதவிக் கொண்டே இருந்தேன்.

துஷ்டி வீடுகளில் சுருட்டும், வெற்றிலை பாக்கு வைக்கும் பழக்கம் கடற்புரத்தில் உண்டு. உடன்பிறந்தவனை அகாலமாய் இழந்த இரண்டே வருடத்தில் உடன்பிறப்பாய் இருந்தவனையும் இழந்த வருத்தத்தில் ஒரு சுருட்டை பற்ற வைத்து கடற்கரை நோக்கி சென்றேன்.
சுருட்டெல்லாம் மனித ஜென்மத்திற்கு மேம்பட்டவர்களுக்கானது என்று தெரிந்து கொண்ட நாள்.
குடிக்கத் தண்ணீர் கிடைக்காதா என தெவங்கிப் போய் கடற்கரையில் உட்கார்ந்திருந்த என்னை நோக்கி அந்தத் தாத்தா ஒரு போனியில் நீத்தண்ணியுடன் வந்து கொண்டிருந்தார்.

“பேரப்புள்ள, இந்தாரும் இந்த நீத்தண்ணிய குடியும். அரசு அதிகாரிகளை பாத்து பேசி காரியத்தை சுளுவா முடிச்சு பிரேதத்தை வாங்கத் தெரிஞ்சவருக்கு சுருட்டு குடிக்கத் தெரியலையே” என்றார். தொடர்ந்து

” சுருட்ட சிகரெட் புகை மாதிரி உள்ள இழுத்தீருனா கபர்தார் தான், புகைய வாய் நிறைய வச்சுகிட்டு வெளிய விட்டுறனும்” என்ற சூட்சுமத்தையும் சொல்லிக் கொடுத்தார்.

நான் யார், எவர் என்ற கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்த பின்பு கூறினார்,
” அதானே, இன்னார் பேரன் இப்படித்தான இருக்கனும். பேரப்புள்ள, உங்க தாத்தா இப்படித்தான் ஊர்க்காரியத்தை தலையில இழுத்துப் போட்டு செய்வார். நீங்களும் அதே மாதிரி வந்திருக்கீங்க ” என்றவர் ஒரு பெரும் சிரிப்புக்கு பின்னர்,

“எல்லாம் ஒழுங்காயிருந்திருந்தா, நீர் எனக்கு பேரப் பிள்ளை ஆகியிருப்பீரு” என்றார்.

புரியாமல் விழித்த என்னிடம்

” அந்தக் காலத்துல என் தங்கச்சி உம்மரு தாத்தாவ லவ் பண்ணுச்சுய்யா” என்றார்.

அட்ரா சக்கை, நல்ல கதையாயிருக்கே என்று

“அப்புறம் என்னாச்சு பப்பா “? என்று வினவியவனிடம், ” உங்க தாத்தா அதைப் பத்தி கவலைப் படலை, வேற யாரோ ஒருத்தங்கள சைட் அடிச்சு அதுக்கப்புறம் உங்க அம்மையை கட்டினார் என்றார்.

நமக்கேத்த தாத்தா என்பது உறுதியானது.

இறந்தவனை பற்றிய பேச்சு வரும்போது கூறினார்,

” எல்லாம் கர்ம பலன்யா”.

மீனவ மக்கள் வாழும் ஒரு முக்கியமான ஊரைச் சேர்ந்தவர்கள் துஷ்டி வீட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தில் எந்த ஆண்பிள்ளையும் தங்கியதில்லை. இளம் வயதில் மரணித்துப் போவான் அல்லது ஒரு இழவுக்கும் ஆகாதாவனாக இருப்பான். எஞ்சியிருக்கும் ஆண்பிள்ளை குடும்பமே வேண்டாமென தொடர்பற்று ஓடியிருப்பான்.

“அது என்ன கர்ம பலன் பப்பா “? எனக் கேட்ட என்னிடம் கூறினார் அந்தக் கதையை.

“பேரப்பள்ள, அந்தக் காலத்துல முறை தவறி பிறக்கிற குழந்தைய அந்த ஊருல ஏத்துக்க மாட்டானுக. சூடு வச்சிருவானுகைய்யா. பாவம் செஞ்ச அப்பனாத்தாவுக்கு வச்சாலும் பரவாயில்லை, பச்சக் குழந்தைக்கு கையில சூட்டை வைப்பானுக பாவிங்க. எந்தக் காலத்துக்கும் அந்த குழந்தை முறை தவறி பிறந்தது அப்படிங்கிறது ஊருக்கே தெரியும். அப்படி சூடு வைக்கிற குடும்பந்தான் இவனுக குடும்பம். அந்த சாபம் சும்மா விடுமா”? என்றார்.

ஊர் வந்திருந்த ஒரு நாளில் அந்தத் தாத்தா மரணித்த சேதி கேட்டு ஓடோடி சென்றேன். தாடி வளர்ந்திருந்த அவரது முகத்தை எந்த வித சேதாரமுமில்லாமல் சவரம் செய்தேன். அவருக்கான வேட்டியை கட்டி விட்டு, பட்டுச் சட்டையை விரைத்துப் போயிருந்த கைகளில் மாட்டும் போது கவனித்தேன்,

“அவரது கைகளில் ஒரு சூட்டுத் தழும்பு”.

ஆவியால் வெந்த பாவி

அது ஒரு வெக்கைக் காலம்.

பெரிய பரீட்சை லீவுக்காக கீழவைப்பார் ரீத்தா அம்மையின் வீட்டுக்கு விஜயம். ஏதோ காரணத்தால் தொண்டையில் எச்சில் கட்டிக் கொண்டு மிகுந்த வேதனை. இந்நாட்களில் Throat infection க்காக Erythromycin னோடு முடிந்திருக்கும்.

அந்நாட்களில் ரீத்தா அம்மை
” ஏதோ கழிப்ப தாண்டியிருப்ப அய்யா” என்று எனக்கு பரிகாரம் சொன்னார்.
பரிகாரம் தீக்கங்குகளில் துப்ப வேண்டும்.
அவ்வாறு ஒரு நாள் துப்பும் போதுதான் தடம் புரண்ட தீக்கங்கு ஒன்று என் பாதங்களில் தடம் மாறி தஞ்சமடைந்தது.

தீக்கங்கின் வெப்பம் தாளாமல் நான் தில்லையரசனின் நடனமாடும் போது ரீத்தா அம்மை அந்தக் கேள்வியை கேட்டார்.

“அடேய், தீக்கங்குக்கே இந்த வரத்து வாறியே!! கொதிக்கிற சுடு தண்ணிய ஆவி பிடிக்கிறேன்னு உன் பெரியப்பன் ஒருத்தன் கவுட்டைக்குள்ள ஊத்தி சாமாண் வெந்து போன கதை தெரியுமாடா? என்றார்.

அந்தக் காலத்தில் அம்மா வழியில், சொத்து வெளியே போய் விடக் கூடாதென தாய் மாமனுக்கே மருமகளை கட்டிக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. சொத்து வெளியே போகவில்லை உள்ளே இருந்தவர்களே காலி செய்தார்கள். அம்மாவை மட்டுமே அந்தோணி தாத்தா வெளியே கட்டிக் கொடுத்தார். அது தனிக் கதை.

பெரியம்மாவை திருமணம் செய்த பெரியப்பா ஒருவர், சிலோன் சம்பாத்தியத்தின் மிடுக்கில் இருந்தவர்.

ஒரு நல்ல நாளில் அவருக்கு தடுமல் பிடித்தது.

எங்கள் ஊரில் தடுமல் எனும் ஜலதோஷத்தால் வரும் தலைவலிக்கு ஆவி பிடிப்போம்.

பரிசுத்த ஆவியல்ல சகோதர சகோதரிகளே, வெறும் வேப்பிலை சேர்ந்த நீராவிதான்.

ஆவி பிடிப்பது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும்.

சிலோன் பெரியப்பா, தனது பவுசை காட்டும் பொருட்டு புதிதாக திருமணமாகியிருந்த தன் தம்பி மனைவியிடம் ஆவி பிடிக்க வெந்நீர் கேட்டுள்ளார்.

வந்த சுடுதண்ணியை கட்டிலில் உட்கார்ந்த வண்ணம் தனக்கருகே ஒரு நாற்காலியில் வைத்து ஆவி பிடிக்க முனைந்திருக்கிறார்.

கொடுஞ் சூட்டிலிருந்த அந்த வெந்நீராவி நாற்காலியில் தன்னை வைத்த கேவலத்தால் மீண்டும் கொதித்து பெரியப்பாவின் மர்ம ஸ்தானத்தில் பாய்ந்து விட்டது.

50 வருடங்களுக்கு முன்பு அவசர மருத்துவ உதவி என்பதெல்லாம் இல்லாத ஒரு விஷயம்.

” புட்டுப்பழம் வெடிச்ச மாதிரி ஒம் பெரியப்பன் பழம் வெந்திருச்சியா” என்று ரீத்தா அம்மை சொன்னார்.

Burnol எனப்படும் தீக்காயத்திற்கான ஆயின்மென்ட்கள் பெட்டி பெட்டியாக இறக்கப் பட்டன. கூடவே தரமான சாராயமும் வலி போக்க.

வெந்த புட்டுப் பழத்தில் பர்ணால் ஆயின்மென்ட் தடவிய பின்பு அந்த இடத்தில் மயிலிறகால் வருடிக் கொடுக்கும் வேலை Dason Maria Santiago எனப்படும் மாமாவின் வேலை.

பின்னாட்களில் அந்தப் பெரியப்பாவிற்கு Black & White என்ற பட்டப் பெயர் வைத்தோம். எல்லாம் வெந்து போன மர்ம ஸ்தான கலரால்தான்.

“இவ்வளவு கஸ்டப்பட்டாரே அம்மை, அதுக்கப்புறம் என்னாச்சு? ” என்று கேட்டவுடன் ரீத்தா அம்மை சொன்னார்,

” அதுக்கப்புறம் ரெண்டு புள்ளை பெத்தான். ஆனா ஒன்னுகூட புட்டுப்பழம் மாதிரி இல்லை” என்றார்.

யானை வளர்த்த நண்பன்.

1995ல் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் சிபிம் கட்சி அலுவலகத்தில் வாசம். அப்பொழுதுதான் எனது நண்பர் இந்தத் தகவலைச் சொன்னார்.

நண்பர் ஒருவருடன் அவர் “விசிறிச் சாமியார்” என்று அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கப் போனார். சாமியாரிடம் நெருங்கிப் பேச கிடைத்த சந்தர்பத்தில் பள்ளிப் பருவத்தில் சக நண்பர்களிடம் தன் வீட்டில் யானை வளர்த்த கதையை சொன்னதை சொல்லியிருக்கிறார்.

பள்ளியில் ஒவ்வொருவரும் ஒரு வளர்ப்பு பிராணி வளர்ப்பதை கண்ட என் நண்பர் தனது நெருங்கிய நண்பர்களிடம் தனது வீட்டில் யானை வளர்ப்பதைக் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியிலுள்ள அந்தக் கடற்கரை கிராமத்தில் யானை வளர்ப்பதைக் காண நண்பரது கூட்டாளிகள் ஆவலாகி விட்டனர்.

சிலபல போக்குகள் காட்டியபின் கூட்டாளிகளை வீட்டில் யாருமில்லாத நேரம் தொழுவத்திற்குள் அழைத்து சென்றிருக்கிறார். யானையை காணாது நண்பர்கள் அது எங்கே எனக் கேட்க,

” அது மேயப் போயிருக்கு” என்று நண்பர் விளக்கியுள்ளார்.

தொழுவை கண்ட கூட்டாளிகள் குழு

“யானைய எங்கேல அடைச்சி வைப்பீக” என்று கேட்டதும் நண்பர் தண்ணீர் தொட்டியை காண்பித்து

” இந்தா, இதுக்குள்ளதான் அடைச்சு வைப்போம்” என்றிருக்கிறார்.

இந்தக் கதையைக் கேட்ட யோகி ராம்சுரத்ககுமார் விழுந்து விழந்து சிரித்திருக்கிறார்.

மோடிஜியின் முதலைக் கதைக்கு எச.

GREENWALK TO KODAIKANAL -DOLMENS

I added one more word to my vocabulary, “ DOLMEN” was the word. (A dolmen is portal grave or a portal tomb of the megalithic period) . With my passion for sea and ships I thought Muthukrishnan must be misquoting the doldrums. Finally I googled to find the real answer. Having come to know that there were megalithic dolmens in the vicinity of Kodaikanal , it was decided that the next Green Walk will be to visit the dolmens.

Image

A team consisting of Muthukrishnan, Saravan, Robert and myself planned to do a pilot survey to take care of the participant’s comforts. The drive to Kodaikanal from Madurai was memorable due to the weather. It was raining heavily. The silver cascade had turned into bronze cascade owing to the heavy rainfall. The most memorable part of the drive was a small break at the Dum Dum rock. I have never seen Dum Dum rock and the Rat tail falls so clearly visible . Not even a speck of dust in the panorama. The flush green fields entwined with the Manjalaru reservoir   gave us a sense of happiness . I just imagined the peace which we could attain , if given a chance to reside at the lonely house visible at the fields. The only thing worrying us was the weather. With only ten days left for the Green Walk , we were worried about the rainfall. Finally we got confirmation from Green Walk’s (un) official Weather Forecaster Mr. Prasad, that things will be alright in 3 days.

After much planning ( which consisted of Rava Kesari, Samosa, and cups of Coffee; Thanks to Mrs. Sumathi Saravanan) it was decided that the Green Walk to Kodai Dolmens will commence on 17th and 18th of May 2014. Individual teams were formed to take care and execute various activities. It was decided that the core team should be present at 5.00 AM at the starting point and the others at 5.30 AM and the official start will commence at 6 AM.

D day arrived, and the journey started with much fanfare . Saravanan’s collection of Ilayaraja hits floated through the bus and many of us entered the state of serenity ( of course ,my family was sitting 3 rows behind me). As a surprise event , a birthday celebration bursted aloud at the foot hills of Kodai. The birthday babies Arun Boss, and Babu Sivasankaran honoured us by cutting cakes. Owing to over enthusiasm , we called Mr. Prasad in Chennai and sang the birthday song. After the full song was shouted by many of us, Prasad coolly informed us that his birthday was on the next day.

We first reached the Thaandikudi dolmen site and breakfast was distributed. As usual littering was not allowed . Many of the Green walkers were fascinated to see the dolmens. They were overjoyed to be in the presence of 5000 year history. Owing to the negligence of concerned authorities, these historical sites of value has become an open air bar for some people belonging to that area. Unless something is done to educate the local about the historical value of these dolmens this kind of atrocities will continue.

Dolmens are burial sites of the megalithic period. It consists of pillar stones and covered by a flat stone on the top. It roughly looks like a giant table. The size of the dolmen increases with the stature of the person buried. As a surprise move more dolmens were discovered, (which were not identified during the pilot trip) by Robert and Savitha , the sweet couple who rode all the way to kodai to and fro in their bike. The Green Walkers were briefed about the history of the dolmens by Muthukrishnan.

Image

The next visit was to the Machur site. The dolmens in this area has been dedicated to a local diety and a makeshift shrine has been erected. Owing to this the dolmens in this area are preserved up to some extent. The path to this site was really exciting to the team since it was into the woods through the bushes. Every one of us boarded the bus to the next visiting point , The museum in the Sacred Heart’s College, Shenbaganur.

Reaching Shenbaganur, we found it difficult to find a spot to serve lunch. Littering and eating inside the museum was prohibited. After ensuring that we will not litter , we were allowed unofficially to have our lunch inside the premises of the college. Green Walk always ensures that no waste or garbage is deposited in any place by its members. In fact a team ensures that all the wastes are collected and deposited in the right place. While having our lunch a passerby on a motor cycle pointed us to the warning board which read “ Eating is not allowed”. We could sense his concern when we noticed that many places in the premises were littered with garbage by the visiting tourists.

Image

The visit to museum was an enchanting opportunity. We could see the specimen of various wild life, flora and fauna. Youngsters (like me) were also fascinated by some specimen wearing micro skirt , which was out of place and didn’t suit the climate. Finally caught red handed( or rather red eyed) by Mrs. Sumathi Saravanan and by my wife Mrs. Agnes, we vacated the museum and boarded the bus to Kodai.

After resting briefly in the St. Anne’s Convent of Luzainne, we moved to the lake area for a brief stroll. We enjoyed the walk along the lake as individual families and some went for shopping. We all nestled into our allotted quarters after dinner. If you imagine the night sleep was peaceful, it would be rude. It would take another page to write about the different decibels of snore which was roared along the hallways.

Next day after breakfast we reached Bryant park . For the convenience of counting to buy the tickets we formed a queue. A curious thing we observed was many people who visited the park started to join our queue. We had to request them to go buy their tickets and this was an entirely different queue.

LESSON LEARNT: If an initiative is taken by someone to form a queue in a crowded place, people follow.

The highlight of the day was the games organized by the a team compromising Vishnu, Sundari, Pinaygash and Shophia. The group was filled with joyous laughter, cat calls, whistles and you name them all. The whole park was wondering what this group of family was enjoying. Many bystanders stood around our group and enjoyed our game too.

With a sense of visiting a different Kodaikanal . we departed to Madurai. We started to Kodaikanal as group of families and returned as ONE FAMILY.

G. CRUZ ANTONY HUBERT

GREEN WALK TO PERAIYUR

When working as a team you could learn a lot from your team members. This Green Walk taught me many things. First and foremost, not to believe in your team members ( Many were punctual this time ,except me). After a lot of planning , this time also with kesari, samosa and green tea, each and every group was given a job to be taken care of and executed.

Of all the Green Walk I have participated, I used to be in the meeting point before the agreed time. But, due to tiresome driving on the previous day which included driving my car right over my wife’s leg ( that’s another happy story) , I ended up waking up at 5 o clock in the morning. I was late by 30 minutes.

Thinks were not encouraging that morning. Many of the regular participants were not able to join us. The main reasons were the Group 2 exams and the day being auspicious. Even Santhalingam sir was not able to join with us. That’s when I learnt some valuable things from the leader. Muthu realized from the start the the number of participants will be low. He faced a different kind of threat this time. Usually , the turnout of the participants will always exclude the breakfast packings we have prepared. But this time it was the opposite.

I expected atleast 40 nos of breakfast will be wasted. But Muthu executed his plan in such a way , that not even one idli was wasted. He always had a fall back plan for every plan.

The participants who had gathered near Jeyaram Bakery started in the bus provided to us by Guhan Matriculation school by 7 o clock. As another friend Mr. Ananth wanted us to board him at Fatima college, we drove there in my car. Thanks to Ananth, we waited there for 20 minutes, which made Muthu boil with anger and myself enjoying a lively conversation of a young couple ( students!!!) through my windshield.

Not wanting the bus to miss the route , we overtook it and was waiting in a turn near Peraiyur. The bus crossed us. Muthukrishnan, trying to stop the bus, waved his hands through the car window. To his astonishment and anger, one of the volunteer waved him back enthusiastically , thinking that Muthu was greeting them. Somehow we reached Peraiyur.

Only then we realized why Muthukrishnan wanted us to be in the place as early as possible. The sun was scorching and the hillock lived up to its name. It was called ‘Motta Malai’.

 

The history of the hillock was narrated by Muthukrishnan. As usual the Green Walk family enjoyed the day.

But that was not the end of the story. After the Green Walk , I drove through a cart road , amidst palm trees, in search of a person , who was referred to me by another friend. He was said to be in the business of relieving people from their tensed life. He sold palm wine. I enjoyed his hospitality.

 

G. Cruz Antony Hubertt.

 

In search of stone age tools and rock paintings

History always fascinates me. Traveling through the annals of history unfolds many mysteries and reveals the culture and life style of a civilization of bygone eras. When the lure of finding stone artifacts and looking at rock paintings was thrown towards me, I grabbed the opportunity. The team consisted of “Green Walk” Muthukrishnan, Saravan and myself from Madurai , Christopher Jayakaran, the renowned geologist , joined us from Bengaluru. Manonmani PuduEzhuthu and Krishnakumar hosted us and guided us through the journey.

Kaveripattinam is a small town situated in between Dharmapuri and Krishnagiri on the banks of river Then Pannayaru. This town is famous for its milk gova , which serves as a base for the milk sweets produced throughout Tamilnadu. The peculiarity of this town is, you can’t have non vegetarian diet on Saturdays. No hotel supplies you non- vegetarian food on Saturday in honour of Lord Venkatachalapathy.

We travelled to ErraGada after a hefty breakfast in Krishnagiri. ‘Erra’ means Red and ‘Gada’ means hillock in Telegu. We scaled the hillock and looked at the excavations for stones, we realized that the hillock is made of gneissic rock and the top soil is red in colour, hence the name ErraGada. Krishnakumar took us to a point where the stones from the field which are under cultivation and from the surfaces nearby had been piled up in rows. I was astonished to see so much stones neatly arranged as hedge. My first impression was that they were all tools. It looked as if an organized factory was run there, manufacturing tools. All the stones there were not stone age tools, I realized later. There were also natural stones which to an untrained eye could pass it for stone tools. We found abundant stone tools and the core stones from which the tools were cut.

IMG_5963 IMG_5959 IMG_5958 IMG_5957 IMG_5956 IMG_5949 IMG_5948 IMG_5926 IMG_5908 IMG_5901 IMG_5899 IMG_0101 Copy of IMG_5908 Copy of IMG_5900 Copy of IMG_5888  IMG_5973

                     Top red-soil covering the hillock.                              The row of  Stones

Jayakaran, Manonmani and Krishnakumar , the veterans in their field started to converse in their jargons. The words “ Paleolithic, Megalithic, Middle megalithic”were all Greek and Latin to me, though I am well versed with ‘Jurassic’ , thanks to Steven Spielberg!

What I learnt from Jayakaran was, that these stones would probably belong to the period more than 50000 years back. To determine the exact date if there were associated artefacts thermo luminescence dating could be done.

 

                            A stone cut for tools                                              Finished Stone Tool

Jayakaran explained us , that the core stone would be selected first and then cracking and chipping the core with another stone . Thus small stones would be cut out of it and then sharpened to use according to the usage. The worked stone tools were used for cutting, hacking, digging and the sharp chips probably as arrow or spear heads. After collecting quite a few specimens, and loading them in my cargo pants, we started our journey down the hillock. A slight deviation from the path that Jayakaran, took us further away and we roamed about half an hour and finally ended up a kilometer away from the starting point.

Our next target was to visit a Rock Art site found by a friend of Manonmani. Unfortunately we couldn’t identify the spot in the hillock. We had a brief rest enjoying the harmony of the nature, feeling the flow of the gentle breeze and munching the groundnut seeds provided to us by the family nearby , who were sowing. This is the first time I’m seeing a hillock abundant with lemon grass and Palmyra trees growing on it. From distance it was as if the hillock was made of jade with boulders of stones scattered.

                                                                                          

                                                                 The Jade Hillock

I have to congratulate Krishnakumar at this juncture. While we were struggling to climb the path, Krishnakumar was seen hopping from one boulder to another carrying a bag of specimens, roughly weighing 20 kgs, in search of the rock art site which we could not locate though. So we had to abandon the wild goose search as it were!.

Krishnakumar and Manonmani were determined to show us another rock art site instead. So from there we moved on to Mallapadi village. This is rock art site was the first one discovered in Tamilnadu.   The Government of Tamilnadu   Department of Archaeology , publication “Rock Art of Tamilnadu   (2005) edited by TS SriDhar , Special commissioner, reportsthat this site was discovered and interpreted by Prof. Raman in 1982 which is debatable. As far I could gather in 1972 a group of archeological students from the Madras University where the ones who discovered these rock art. Probing into a small rock shelter by the foothills Jayakaran came across a rock painting of probably earlier period drawn in white using , Kaolin, what seems like the picture of man on a horse. The paintings below are faded unfortunately.

 

                                             Rock art discovered by Jayakaran

 

Finally we were lead to the cave where the well preserved rock painting can be seen. There are many drawings. But the important ones are two men on horsebacks, facing each other holding spear like objects. The proportions are very good except for the object they are holding which is too long for a spear . This is also interpreted as fighting scene , which is debatable. The cave where this rock art is situated is situated in a lonely place and has a very low entrance. This could also be the reason why the rock paintings have been preserved, since the entry for human beings is restricted. Jayakaran’s view on this cave was it should have been much deeper and time has covered its depth.

As usual , the state of the cave was of much concern. The locals have used it as bar and have littered with empty and broken liquor bottles. It was a heart breaking moment. When you travel down a path in the history and find some of the roots of our civilization, and then realize they are being defecated , one could only wonder whether we are civilized. There is no point in blaming the archeological department of India for its attitude . Unless the locals are educated about the value of these archeological wonders, the desecration will continue.

                                                               Rock Paintings

 

It would be ingratitude if I am not mentioning the hospitality of Manonmani Puduezhuthu and Krishnakumar ( fondly called as Murugan and Kittu respectively). From the day we arrived at Kaveripattinam we were not allowed to spend a dime. Both these gentlemen spend their leisure probing into the nearby hills in search of hero stones and rock art.

 

This travel was an entirely a different experience for me. I felt elated when I realized that , I was holding in my hands, from stone age tools and crouching a in a cave where a clan belonging to 200 BC would have stayed. Thanks to Muthukrishnan for the opportunity. While returning, Jayakaran pointed to a sisal plant ( a type of Katrazhai from which Chinnalapatti silk is made) . While opening, the outer blades of sisal seem to have left an impression of the leaves, forming fascinating geometric pattern. It was a wonderful sight.

                                                                                                                             

                                                     Sisal blades with impressions.

In the future Green Walks , you can be rest assured to see Saravanan and myself collecting , starring at stones and discussing whether they are from Paleolithic or Neolithic period , if they are broken stones or a core or finished stone age tool.

                                   The Team                                   Jayakaran at work.

                      

 

                         Stone Tools ( Picture Credit : Christopher Jayakaran)

 

Cruz Antony Hubertt

 

மதியாதார் தலைவாசல் மிதியாதே

சென்னையில் PGDCA படித்துக் கொண்டிருந்த காலம். மிகவும் நெருங்கிய நண்பன் அய்யங்கார் வகையறா. பிறப்புத்தான் அய்யங்கார், நான் கொண்டுவரும் அனைத்து அசைவ சாப்பாடும் அவனுக்கு என்பது எழுதப்படாத சட்டம்.

வீட்டிற்கு கண்டிப்பாக சாப்பிட வரவேண்டும் என்று அழைத்ததால் நண்பர்கள் ஒரு ஞாயிறன்று பல்லாவரத்தில் இருக்கும் அவனது வீட்டிற்கு சென்றோம்.

விருந்தெல்லாம் முடிந்ததும் அவனது சித்தி ( அவனது தாய் பிரிந்து சென்றுவிட்டார்) நான் அமர்ந்திருந்த இடத்தை சிறுது நீர் விட்டுக் கழுவினார்.

அதைக் கண்டு நண்பனது முகம் இறுகியது. அதன் அர்த்தம் தெரியாத என்னிடம் பல்லாவரம் ரயில் நிலையம் வந்ததும் கூறினான், ” தீட்டு கழிக்கிறாங்களாம் மச்சான். சாரிடா. இனிமேல் நானே கூப்பிட்டாலும் வராதேடா” என்றான்.

எதுக்கு சொல்லுறேன்னா ” மதியாதார் தலைவாசல் மிதியாதே”.

#GoBackModi

நந்தா நீ என் நிலா

“நந்தா நீ என் நிலா” என்ற பாடல் இன்று காலை முதல் எனக்குள் ஏனோ மனதுள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

காலையில் நிலாவும் நானும் இருக்கும் பதிவுக்குக் கூட இந்தத் தலைப்பையே சூட்டியிருந்தேன்.

சட்டென்று ஞாபகம் வந்தது .

தூத்துக்குடியில் ” தட்டார் லேன்” எனப்படும் தட்டார் சந்தில் தான் அப்பாவின் பண்ணை வீடு.
ஒரு காலத்தில் பொற்கொல்லர்கள் வாழ்ந்த இடம். ஒவ்வொருவராக மீனவ மக்களிடம் வீட்டை விற்றுவிட்டு வேறு இடம் நோக்கி நகர்ந்து விட்டனர்.

எஞ்சியிருந்தவர்களில் அடுத்த வீட்டு முத்து அண்ணனும் ஒருவர். பொற்கொல்லர் தான். ஆனால் அத்தொழில் செய்யவில்லை.

சிறிய மூங்கில்களை வாங்கிவந்து சூட்டுக் கோலால் சரியான இடத்கில் துளையிட்டு புல்லாங்குழல் செய்வார்.

ஒருமுறை அவ்வாறு செய்த புல்லாங்குழலில்தான் ” நந்தா நீ என் நிலா” பாடலை வாசித்துக் காட்டினார். ஆழ்மனதில் பதுங்கியிருந்த நினைவொன்று ” நிலா” என்ற பெயரின் நிணைவலையில் கடல் ஆழத்திலிருந்து மேல் நோக்கி ஓடோடி வரும் நீர்க்குமிழ் போல் வந்து வெடித்திருக்கிறது.

சென்ற முறை ஊர் சென்றிருந்தபோது மட்டக்கடையில் முத்து அண்ணனை பார்த்தும் பார்க்காதது போல சென்றுவிட்டேன்.

முத்து அண்ணன் மனநிலை பிறழ்ந்து சுற்றிக்கொண்டிருந்தார்.

தம்பான்

தம்பான் மீன்.

பெரிய தலையையும் அகலமான வாயையும் கொண்ட கடல் மீன்.

கடற்புர வாழ்வியலில் பட்டப்பெயர் எனும் இடு பெயர் சுவாரசியமானதாகும். அனேகமாக ஒவ்வொருவருக்கும் ஒரு கேலிப் பெயர் இருக்கும். சில குடும்பங்கள் இது போன்ற கேலிப் பெயராலேயே விளிக்கப்படும்.

வெட்டுக்கத்தி, ஒட்டுக்குஞ்சான், குடலொட்டி, பீக்குண்டி இவையெல்லாம் சில குடும்பப் பெயர்கள். எங்களது தந்தை வழி பாட்டியின் பெயர் சூசையம்மாள். வல்லநாடு அருகிலுள்ள மணக்கரை என்ற ஊரில் பிறந்தவர். ஆகவே என் தந்தைவழி குடும்பத்தாருக்கு மணக்கரையா குடும்பம் என்று பெயர்.

நான் பிறந்த போது பார்க்க வந்திருந்த அப்பாவின் நண்பர்களில் ஒருவரான குயிண்டின் மாமா என்னை பார்த்து ” என்ன மாமா , இவன் தம்பா மீன் கணக்கா இருக்கிறான்?” என்றிருக்கிறார்.

ஞானஸ்நானத்துக்கு முன்பு எனக்கு சூட்டப்பட்ட பெயர் அதுதான்.

முதல் வரியை வாசித்துக் கொள்ளுங்கள் 😊

புத்தக தினம்

ஒரே ஓட்டம். மட்டக்கடை ரவி ஸ்டுடியோ அருகிலிருந்த ரேடியோ ரிப்பேர் கடையிலிருந்து வீடுவரை சுமார் 400 மீட்டர் தலைதெறிக்கும் வேகம்.

அந்த ரேடியோ ரிப்பேர் செய்யும் கடையின் திண்ணையில் அந்தத் மீசைக்கார தாத்தா இரண்டு அட்டை பெட்டிகள் நிறைய கதைப் புத்தகங்கள் வைத்திருப்பார். 25 பைசா கொடுத்து ஒரு புத்தகத்தை படிக்கலாம். அவர்மூலம் அறிமுகமானவர்கள்தான் ரிப் கெர்பி, இரும்புக்கை மாயாவி போன்றோர். அப்படியான
ஒரு சுபயோக சுபதினத்தில்தான் புத்தகம் படித்துவிட்டு காசுகொடுக்காமல் புத்தகத்தை ஆட்டையைப் போட்டு ஓடிவந்தது.

பெரிய வீட்டுப் பையன் என்ற அடையாளம் சுலபமாக அவரை எங்கள் வீடு நோக்கி வரவைத்தது. எனது புத்தக வெறி எனது தாயாரை மெய்சிலிர்க்க வைத்தது. அவர் அன்று சிலிர்த்த சிலிர்ப்பில் ஒரு கீரை கடையும் மத்தும் தும்புக்கட்டையும் உடைந்தது.

எனக்கான வாசிப்பு பழக்கம் எவ்வாறு வந்தது என்று யோசிக்கும்போது அன்றைய பள்ளி அட்டவனையில் Library என்று ஒரு வகுப்பு வாரம் ஒருமுறை இருக்கும். வகுப்பு முழுவதற்கும் வேண்டிய புத்தகங்களைத் தூக்கிவரக்கூடிய தடிமாடுகளில் நானும் ஒருவனாக இருந்ததால் நமக்குத் தேவையான நல்ல புத்தகங்களை எடுக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆதலால் ஆங்கிலப் புத்தகங்களே இருக்கும். அப்படி 5ம் வகுப்பில் அறிமுகமானவர்தான் Enid Blyton.

பின்னர் பாடப்புத்தகங்களுக்குள் மறைத்து வைத்து குமுதம், கல்கண்டு, பேசும் படம் போன்ற புத்தகங்களை படிக்கும் கலை கைகூடியது.
10ம் வகுப்பில்தான் சரோஜாதேவி அறிமுகமானார். சாணித்தாளில் வரும் அப்புத்தகங்கள் பெரும்பாலும் கக்கூஸில்தான் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். ஒளித்து வைப்பவர்கள் வீட்டிலிருந்த அண்ணன்மார்கள். படித்துவிட்டு அதை இடம் மாற்றி வைத்து அவர்கள் வயிற்றில் புளியைக் கரைப்பது என் வேலை.

விஜி அக்காவும், Antony Clyton, அண்ணனும் சாண்டில்யனையும், கல்கியையும் 10 ம் வகுப்பில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

புத்தகங்களை சேமிக்க வேண்டும் என்ற ஆசையரும்பியது எனக்கு 10ம் வகுப்பில் கணிதம் சொல்லிக் கொடுத்த எல்மர் சாரால்தான். அவர் வீட்டில் James Hadley Chase ன் அனைத்து நாவல்களும் இருக்கும்.

சென்னையில் இருந்த காலத்தில் உணவா? புத்தகமா? என்றிருந்த காலங்களில் புத்தகங்களைத் தேர்ந்து 2 நாட்கள் பட்டினியோடு படித்திருக்கிறேன்.

இன்றும் தினமும் வாசித்து விடுகிறேன். பெரும்பாலும் அவை கக்கூசில்தான். ஆனால் இப்பொழுது சரோஜாதேவி புத்தகங்களை அல்ல.

இனிய புத்தக தின வாழ்த்துகள்.